Pattamboochi

பாடகர் பாட்ஷாவுடன் இணைந்து மாளவிகா மோகனனின் அசத்தல் நடனம்.. வெளியான முதல் வைரல் இசை வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகன் பிரபல பாடகர் பாட்ஷா உடன் இணைந்து புதிய இசை வீடியோவில் நடித்துள்ளார்.

malavika mohanan sizzles in this sensuous music video TAUBA

Also Read | தாய்லாந்தில் ஜாலியாக ஊர் சுற்றும் விக்கி - நயன்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஹனிமூன் PHOTOS

2013 ஆம் ஆண்டில் வெளியான பட்டம் போலே எனும் மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

கேரளாவை சார்ந்த இவர்  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

malavika mohanan sizzles in this sensuous music video TAUBA

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

கடைசியாக தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், இத்தாலி & மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் இணயத்தில் ட்ரெண்ட் ஆகின.

malavika mohanan sizzles in this sensuous music video TAUBA

மாளவிகா மோகனன், இந்தியா திரும்பியதும் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள தடோபா காட்டில் சஃபாரி செய்து, காட்டு விலங்குகளை புகைப்படங்கள் எடுத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று அந்த போட்டோக்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

malavika mohanan sizzles in this sensuous music video TAUBA

இந்நிலையில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து இசை வீடியோவில் நடித்துள்ளார். TAUBA என்ற இந்த இசை வீடியோவில் மாளவிகா மோகனன் & பாட்ஷா நடனமாடி நடித்துள்ளனர்.இன்று (24.06.2022) இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | இந்தி சினிமாவின் KGF.. ரன்பீர் கபூர் - சஞ்சய் தத் நடிக்கும் ஷம்ஷேரா.. வெளியான GOOSEBUMPS டிரெய்லர்!

பாடகர் பாட்ஷாவுடன் இணைந்து மாளவிகா மோகனனின் அசத்தல் நடனம்.. வெளியான முதல் வைரல் இசை வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

malavika mohanan sizzles in this sensuous music video TAUBA

People looking for online information on மாளவிகா மோகனன், Malavika Mohanan, TAUBA will find this news story useful.