Reliable Software
www.garudabazaar.com

கர்ணன் பட விழாவில் என்ஜாய் எஞ்சாமி பாடகி 'தீ' பேசிய கியூட் வார்த்தைகள்... "அவருக்கு நன்றி ஏன்னா"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ஹிந்தியில் அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் இயக்கும் D43, செல்வராகவனின் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டனியில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் புதிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

karnan new song in enjoy enjaami dhee voice 'தீ' குரலில் கர்ணன் பட பாடல்

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதத்தில்  உலகமெங்கிலும் கர்ணன் படம் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கர்ணன் படத்தின் "கண்டா வர சொல்லுங்க" 'பண்டாரத்தி புராணம்' போன்ற பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல்களை பார்க்கும் போது அசுரனுக்கு இணையான அசுரனை இந்த படத்தில் பார்க்க போகிறோம் என்பது மட்டும் உறுதி. இந்நிலையில் கர்ணன் திரைப்படத்திலிருந்து புதிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது. என்ஜாய் எஞ்சாமி புகழ் தீ குரலில் "உட்றாதீங்க யப்போ' என்ற இந்த பாடல் நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்கிறது என்று தான் சொல்லவேண்டும். இந்நிலையில் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

கர்ணன் பட விழாவில் என்ஜாய் எஞ்சாமி பாடகி 'தீ' பேசிய கியூட் வார்த்தைகள்... "அவருக்கு நன்றி ஏன்னா" வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

karnan new song in enjoy enjaami dhee voice 'தீ' குரலில் கர்ணன் பட பாடல்

People looking for online information on Dhanush, Dhee, Karnan will find this news story useful.