Reliable Software
www.garudabazaar.com

செஃப் தாமுவின் அழகான மனைவி, மகளை பார்த்து இருக்கீங்களா.. மகளுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

CWC chef dhamu latest picture with daughters செஃப் தாமுவின் இரண்டு மகள்கள்

இந்நிலையில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளை தாண்டி இந்நிகழ்ச்சியை தாங்கிப் பிடிப்பவர்கள் சமையல் கலைஞர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் தான். இவர்கள் இருவருமே உலகமறிந்த சமையல் கலைஞர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் செஃப் தாமு அவர்கள் 2010-ஆம் ஆண்டு தனி ஒருவராக நீண்டநேரம் சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர். மேலும்  ஹோட்டல் மேலாண்மை மற்றும் சமையல் துறையில் முதல் பி. எச்டி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல சாதனைகளை படைத்த தாமு அவர்கள் கலப்படம், உள்குத்து, சர்வர் சுந்தரம், ஒரு பக்க கதை போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்திஇருக்கும் அவரின் குடும்பம் மற்றும் மனைவி மற்றும் இரண்டு மகள்களை பற்றி பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் செஃப் தாமு தனது மகள்களுடன் ஒரு அழகிய புகைப்படம் இதோ..!

தொடர்புடைய இணைப்புகள்

CWC chef dhamu latest picture with daughters செஃப் தாமுவின் இரண்டு மகள்கள்

People looking for online information on Cooku with comali, Dhamu will find this news story useful.