Reliable Software
www.garudabazaar.com

Video: "கர்ணனை பார்த்ததும் தயாரிப்பாளரின் ரியாக்‌ஷன் இதுதான்.. சம்பளமே வேணாம் சார்!" - இயக்குநர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை அவர் இயக்கி வந்தார்.

Mari Selvaraj Producer Thanu reaction over dhanush karnan movie

தனுஷ் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் விழாவில் பேசிய மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படம் வெளியான பின்னர் நடிகர் தனுஷூம் தயாரிப்பாளர் தாணுவும்  கதை கேட்டது முதல் படத்தினை தாணு பார்த்தது முதல் அத்தனையும் பதிவு செய்தார்.

குறிப்பாக நீ எடுத்து முடிச்சுட்டு வா நான் இருக்கேன் என தாணு சொன்னதில் தொடங்கி, தன் மகனுடன் அமர்ந்து தயாரிப்பாளர் தாணு முழு படத்தையும் பார்த்தது வரை அத்தனையும் பகிர்ந்துகொண்டார். அதில், “தவறு செய்துவிட்டால் தாணு சார் முகம் மாறிடும்னு எல்லாரும் சொன்னாங்க. அவர் படம் பாக்கும்போதே நெனைச்சேன். ரைட்டு முகம் மாறப்போகுதுனு தயாராகிட்டேன்.

Mari Selvaraj Producer Thanu reaction over dhanush karnan movie

பிறகு கடைசிக்காட்சி ஓடும்போது அவருக்கு அருகில் போயிட்டேன். அவர் என்னை கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தார். இத்தனை நாள் நீ என்ன வேலை பண்ணின என்று நான் குழம்பிக் கொண்டு இருந்தேன். இப்போதுதான் நீ என்ன வேலை செஞ்சிருக்க என பார்த்து பிரம்மித்திருக்கேன் என்றார். இந்த படம் ரிலீஸ் ஆவதையும் தாண்டி உலகின் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் நீ அனுப்பு என்றார் அவர். அந்த நாள் மட்டும் எனக்கு போதும் தாணு சார். இதுக்கு அப்றம் நீங்க சம்பளம் தரல என்றாலும் பரவாயில்லை (வேடிக்கையாக)” என குறிப்பிட்டுள்ளார் மாரி செல்வராஜ்.

கர்ணன் படம் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகிறது. மாரி செல்வராஜ் பேசிய முழு வீடியோவை இணைப்பில் காணலாம். 

ALSO READ: “தனுஷின் கர்ணன் நடக்கும் வருஷம் இதுதான்.. கடவுள்களை வைத்து இதை செய்திருக்கேன்” - இயக்குநர்!

VIDEO: "கர்ணனை பார்த்ததும் தயாரிப்பாளரின் ரியாக்‌ஷன் இதுதான்.. சம்பளமே வேணாம் சார்!" - இயக்குநர். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mari Selvaraj Producer Thanu reaction over dhanush karnan movie

People looking for online information on Dhanush, Kalaipuli S Thanu, Karnan Tamil, Mari Selvaraj, Santhosh Narayanan will find this news story useful.