Bigg Boss Tamil 3: ‘அவளுக்கு என்னோட என்ன பிரச்சனை..?’- மீண்டும் கவினை நச்சரித்த சாக்ஷி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 29, 2019 10:22 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 35ம் நாள் எபிசோடில் லொஸ்லியா பற்றி மீண்டும் கவினிடம் சாக்ஷி கேள்வி எழுப்பியது, முடிந்த கதையை மீண்டும் தொடரும் முயற்சியாக பார்க்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். எலிமினேஷனுக்கு பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த உரையாடலில் சாக்ஷி கவினிடம் வந்து, ‘லொஸ்லியா எதாவது சொன்னாளா? அவளுக்கு என்னோட என்ன பிரச்சனை? என் கண்ணு பார்த்து பேச மாட்டேங்கிறா.. முன்னாடி இருந்த Friendship இல்ல இப்போ..’ என்றார்.
இதற்கு பதிலளித்த கவின், ‘இல்லையே மச்சான்.. அவன் என்கிட்ட எதும் சொல்லல.. அவ பேசலன்னா நீ அவக்கிட்ட போய் கேளு..’ என்றார். நாம வெறும் Friends தான் என்ற இவர்களது கொள்கை மீண்டும் மாறக் கூடுமோ என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.