சின்னத்திரை பிரபலமான சித்து உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘அகோரி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘திருமணம்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமாகி வரும் நடிகர் சித்து ‘அகோரி’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தோன்றுகிறார்.
ஆர்.பி பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சார்பி சுரேஷ் கே.மேனன் இணைந்து தயாரிக்கும் படம் ‘அகோரி’. நடிகை சாயாஜி ஷிண்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சின்னத்திரை பிரபலமான சித்து, மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை டி.எஸ்.துரைக்குமார் இயக்கியுள்ளார்.
வசந்த் ஏ.வி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் குழு இசையமைத்துள்ளது. பேய் மற்றும் அகோரிகளை பற்றிய கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.
சின்னத்திரை டூ வெள்ளித்திரை பிரவேசம்- அட திருமணம் சந்தோஷா இது..? வீடியோ