www.garudabazaar.com

சிறுத்தை சிவாவுடன் 'சூர்யா 42' படத்தின் பிரபல முன்னணி டெக்னீசியன்.. வேற லெவல் வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா, அடுத்ததாக சிவா இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கிறார்.

Suriya 42 Movie Editor Nishadh Yusuf with Director Siva

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா,  பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். "வலிமை மிகு வீரம்" எனும் அடைமொழியுடன்  டைட்டில் அமைந்தது.

மிகப்பெரும் பட்ஜெட்டில்  உருவாகும் இப்படத்தில்  பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார்.  இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.  இந்த படத்தின் எடிட்டராக பிரபல மலையாள சினிமா எடிட்டர் நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் துவங்கியது. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்ட அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் ஆகிய 5 கதாபாத்திரத்திலும் நடிகர் சூர்யாவே நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Suriya 42 Movie Editor Nishadh Yusuf with Director Siva

இந்நிலையில் இயக்குனர் சிவாவை இந்த படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் சந்தித்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷாத் யூசுப் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya 42 Movie Editor Nishadh Yusuf with Director Siva

People looking for online information on Nishadh Yusuf, Siva, Suriya42 will find this news story useful.