விஜய்யின் மாஸ்டர் : வாத்தி கம்மிங் பாடலுக்கு ஸ்டெப் போடும் பொடியன்.! Viral Video Here.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு சிறுவன் போடும் ஆட்டத்தின் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

விஜய்யின் மாஸ்டர் பாடலுக்கு ஆடும் குழந்தை | young child's vaathi coming step of vijay anirudh's master goes viral

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி பாடல் வைரல் ஹிட் அடித்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருந்து வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அனிருத் போட்ட செம குத்து பாடலாக வெளியான வாத்தி கம்மிங்கை, பலர் டிக்டாக் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஒரு சிறுவன் ஆடும் ஆட்டம் வைரல் ஆகி வருகிறது. அனிருத்தை போலவே, தோள்களை குலுக்கி பொடியன் போடும் ஆட்டத்துக்கு நெட்டிசன்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Entertainment sub editor