Reliable Software
www.garudabazaar.com

பிரபல சேனலில் அதிரடியாக வெளியாகும் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் 'மண்டேலா'... தரமான சம்பவம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் நடிகர் யோகி பாபு. ரஜினிகாந்த், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட அவரது மண்டேலா என்ற படத்தைப் பற்றின சிறப்பு அப்டேட் வெளியாகியுள்ளது.!

yogi babu starrer mandela release date யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் 'மண்டேலா'

அறிமுக இயக்குனர் மதோனி அஸ்வின் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஒய்.நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷ்பெர்ரி நிறுவனங்களுடன் இணைந்து 'மாரி' இயக்குனர் பாலாஜி மோகன் தனது ஓபன் விண்டோ தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இதில் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் (டூலெட் புகழ்), கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப பக்கத்தில், படத்தின் ஒளிப்பதிவை விது ஐயண்ணா கையாள, படத்தின் எடிட்டிங்கை பிலோமின் ராஜ் கையாளுகிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த படம் விஜய் டிவியில் நேரடி வெளியீட பட இருக்கிறது என்று ஏ.ஆர்.முருகதாஸ் டீவீட் செய்துள்ளார். அவரது கூறும்போது "இதோ #Mandela டிரெய்லர்! சரியான நேரத்தில் பொருத்தமான கன்டென்ட்  :) உலகம் முழுவதும் விஜய் டிவியில் ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது" என்று கூறியுள்ளார்.

பிரபல சேனலில் அதிரடியாக வெளியாகும் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் 'மண்டேலா'... தரமான சம்பவம்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

yogi babu starrer mandela release date யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் 'மண்டேலா'

People looking for online information on Madela, Yogi Babu will find this news story useful.