Reliable Software
www.garudabazaar.com

"இப்டி கேலி கிண்டல் செய்றவங்க"... நடிகர் சாந்தனு தன்னை Troll செய்தவருக்கு கொடுத்த நெத்தியடி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அதே போல் மிகவும் நலிவுற்றிருந்த திரையரங்குகள் மற்றும் அதன் சார்ந்த தொழில்களை மாஸ்டர் மீண்டும் உயிர் பெற செய்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Actor Shanthnu vera level reply to a troll நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சாந்தனுவும் நடித்திருந்தார். இந்நிலையில் சில நெட்டிசன்கள் அவரது கதாபாத்திரத்தை Troll செய்யும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். ஆரம்பத்தில் இவற்றை சகஜமாக எடுத்துக் கொண்ட நடிகர் சாந்தனு தற்பொழுது தேசிய விருது பற்றின ஒரு எல்லை மீறிய ஒரு Trollக்கு சரியான நெத்தியடி பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "ஒருவரை இப்படி கேலி கிண்டல் செய்யும் பொழுது சிலருக்கு அற்பமான மகிழ்ச்சி கிடைக்கிறது போல. இந்த கிண்டல்களை பார்த்து எனக்கு சோர்வாகிவிட்டது. ஆனாலும் என் மீது தெரிந்தோ தெரியாமலோ கற்களை வீசும் அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்களே சொல்லிட்டீங்க நடக்காமல் போய்விடுமோ. ஒரு நாள் நிச்சயம் இது நடக்கும்  அப்பொழுது எனது பதில் இதுவாகத்தான் இருக்கும். அன்புடன் பார்கவ்" என்று பெருந்தமையுடன் கூறியுள்ளார்.

Tags : Shanthnu

Actor Shanthnu vera level reply to a troll நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி

People looking for online information on Shanthnu will find this news story useful.