காமெடி படம் தான் ஆனா.. ஆக்ஷனில் தீவிரம் காட்டும் யோகிபாபு!!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 09, 2019 01:41 PM
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் யோகிபாபு காமெடி ரோலில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘தர்மபிரபு’, ‘கூர்கா’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆக்ஷன் கலந்த பேய் படமாக உருவாகவிருகும் “காதல் மோதல் 50/50” என்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் யோகிபாபு நடிக்கவிருக்கிறார். அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம் "த்ரயா" என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்கவுள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார்.
தற்போது மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘கண்ணைநம்பாதே’ என்ற படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தனது லிபிசினி கிராப்ட்ஸ் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.