‘இது எப்டிண்ணே எரியும்?’ - தமன்னா-யோகி பாபுக்கு கிடைத்த சூப்பர்ஹிட் காமெடி டைட்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அதே கண்கள்’ பட இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tamannaah and Yogi Babu starring horror comedy film titled as Petromax

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தில் ராம்தாஸ், மன்சூர் அலிகான், சின்னத்திரை பிரபலம் டிஎஸ்கே ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் டான் கேக்கத்துர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், தமன்னா-யோகி பாபு நடிக்கும் இப்படத்திற்கு ‘பெட்ரோமாக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது விஜயகாந்த் நடித்த ‘வைக்தேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் கவுண்டமணி-செந்தில் இடையிலான சூப்பர்ஹிட் காமெடி வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.