‘பெட்ரோமாக்ஸ்' லைட் தான் வேணுமா? தமன்னா-யோகி பாபு பட First Look இதோ !
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 19, 2019 11:23 AM
அதே கண்கள்’ பட இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தில் ராம்தாஸ், மன்சூர் அலிகான், சின்னத்திரை பிரபலம் டிஎஸ்கே ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் டான் கேக்கத்துர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், தமன்னா-யோகி பாபு நடிக்கும் இப்படத்திற்கு ‘பெட்ரோமாக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது விஜயகாந்த் நடித்த ‘வைக்தேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் கவுண்டமணி-செந்தில் இடையிலான சூப்பர்ஹிட் காமெடி வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Excited to share the First look of @EaglesEyeProd presents #Petromax starring @tamannaahspeaks.Best wishes team.@rohinv_v @iYogiBabu @kaaliactor @tsk_actor @premkumaractor @GhibranOfficial @DaniRaymondJ @leojohnpaultw @meevinn @onlynikil @DoneChannel1 @thinkmusicindia pic.twitter.com/c6CLBQ3nic
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) July 19, 2019