Breaking: தமன்னா-யோகி பாபு இணையும் ‘பெட்ரோமாக்ஸ்’ ரிலீஸ் எப்போ தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 09, 2019 10:54 AM
'அதே கண்கள்’ பட இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தில் ராம்தாஸ், மன்சூர் அலிகான், சின்னத்திரை பிரபலம் டிஎஸ்கே, பிரேம், ஸ்ரீஜா, கே எஸ் ஜி வெங்கடேஷ், பேபி மோனிகா ஆகியோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் டான் கேக்கத்துர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
பல வெற்றி படங்களை உலகம் முழுவதும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது திரைப்படங்கள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. ரீமேக் திரைப்படங்களை மட்டுமே தயாரிக்க திட்டமிட்டுள்ள ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் முதல் திரைப்படமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சூப்பர் ஹிட் தெலுங்கு படத்தின் ரீமேக்காக ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படம் தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை செப்.13ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.