பிக்பாஸ் நிகழ்ச்சியை யோகி பாபு தொகுத்து வழங்கினால் செம்மயா இருக்கும்..! - கோமாளி பட இயக்குனர்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 15, 2019 03:53 PM
கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு.

சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும், உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. அந்தவகையில் இன்று வெளிவந்திருக்கும் கோமாளி படத்தில் யோகி பாபுவின் காமெடி வேற லெவல் ஃபன் என ஆடியன்ஸ் கூறி வருகின்றனர்.
இப்பட இயக்குனர் பிரதீப் டிசைன் Behindwoods தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் யோகி பாபுவின் நடிப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தபோது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யோகி பாபு தொகுத்து வழங்கினால் செம்மயா இருக்கும் என்று கூறி சிரித்தார். மேலும் அந்த வீட்டிலிருக்கும் அத்தனை பேரையும் கலாய்த்து காமெடி செய்து நிகழ்ச்சியை சூப்பரா தொகுத்து வழங்குவார் என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை யோகி பாபு தொகுத்து வழங்கினால் செம்மயா இருக்கும்..! - கோமாளி பட இயக்குனர் வீடியோ