KAAPAN USA OTHERS

பிக்பாஸ் வீட்டுக்குள் போகும் பழைய பிக்பாஸ் போட்டியாளர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சேரன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். போகும்போது கவினுக்கு 10 நாட்கள் போட்டியில் கவனம் செலுத்தி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுமாறு அறிவுரை கூறினார்.

Rithika, Janani, Aiswarya, Yashika are going inside in Bigg Boss 3

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (செப்டம்பர் 24) இந்த வாரத்துக்கான எலிமினேஷனுக்கான நாமினேஷனை புதிய விதமாக  பிக்பாஸ் அறிவித்தார். அதன் படி போட்டியாளர்கள் Confession ரூமிற்கு சென்று யார் இந்த வாரம் வெளியேறக் கூடாது என்று சொல்லவேண்டும் என்றும் அதற்காக பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என்றும் நிபந்தணை விதித்தார்.

ஒவ்வொரு  வரும் தங்களுக்கு விருப்பமான பெயர்களை தெரிவித்து மிளகாய்களை சாப்பிட்டனர். முகேன் மூன்று மிளகாய்களை தின்றார். பின்னர் பிக்பாஸ் இது கடைசி வாரம் என்பதால் முகேன் தவிர மற்ற எல்லோரும் நாமினேட் செய்யப்படுகிறார்கள் என்றும் முன்பு தான் சொன்னது அனைத்தும் பொய் என்றும் கூறியதும் தாங்கள் ஏமாந்ததை எண்ணி போட்டியாளர்கள் அதிர்ச்சியானார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாள்களான ரித்திகா, ஜனனி, ஐஸ்வர்யா, யாஷிகா உள்ளிட்டோர் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.