www.garudabazaar.com

"சுடும் வெயிலில்".. பிரியா பவானி சங்கர் பகிர்ந்த இதுவரை காணாத செமயான 'யானை' பட கேரக்டர் STILLS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'யானை' படம் கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Yaanai Movie Priya Bhavani Shankar Character Unseen Stills

Also Read | Cook With Comali 3: "ஹாலிவுட்டில் உருவாகும் பார்த்திபன் படம்.?" - டிவி நிகழ்ச்சியில் அவரே சொன்ன தகவல்.!

யானை படம் சென்சார் போர்டால் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. யானை படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவது 1500+ திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.

யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஹரி.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Yaanai Movie Priya Bhavani Shankar Character Unseen Stills

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் யானை படத்தின் BTS ஸ்டில்களை நடிகை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு தலைப்பாக "சுடும் வெயிலிலும் ஜெபமலர் மகிழ்ச்சியாக உள்ளார்" என எழுதியுள்ளார்.

Yaanai Movie Priya Bhavani Shankar Character Unseen Stills

யானை படத்தில் பிரியா பவானி சங்கர் 'ஜெபமலர்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் நிறுவனம் (ZEE5 OTT & ZEE தமிழ்) கைப்பற்றி உள்ளது.

Also Read | அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்'.. நயன்தாராவின் வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Yaanai Movie Priya Bhavani Shankar Character Unseen Stills

People looking for online information on Priya Bhavani Shankar, Yaanai movie will find this news story useful.