Rocketry
www.garudabazaar.com

விக்ரம் நடிக்கும் கோப்ரா.. வெளியான "உயிர் உருகுதே" சிங்கிள் பாடல்! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

Vikram Starring Cobra movie Uyir Urugudhey Song Released

Also Read | புதிய படத்தின் ரிலீஸ்.. ப்ரோமோஷன் போட்டோ ஷூட் நடத்திய அனுபமா பரமேஸ்வரன்! வைரல் ஃபோட்டோஸ்

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

Vikram Starring Cobra movie Uyir Urugudhey Song Released

கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள்,  சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

Vikram Starring Cobra movie Uyir Urugudhey Song Released

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல் மற்றும் அதீரா உள்ளிட்ட பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் "உயிர் உருகுதே" என தொடங்கும் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். A.R.ரஹ்மான் இந்த பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார்.

Also Read | பில்லா ஸ்டைலில் லண்டனில் வலம் வந்த நடிகர் அஜித்குமார்.. அந்த கெத்து அப்படியே! வைரல் வீடியோ

விக்ரம் நடிக்கும் கோப்ரா.. வெளியான "உயிர் உருகுதே" சிங்கிள் பாடல்! எப்படி இருக்கு? வீடியோ

Vikram Starring Cobra movie Uyir Urugudhey Song Released

People looking for online information on Cobra movie Uyir Urugudhey Song, Uyir Urugudhey Song Release, Vikram cobra movie will find this news story useful.