Rocketry

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை.. இத்தனை தியேட்டர்கள்ல ரிலீஸா? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யானை படம் நாளை ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Arun Vijay Hari Yaanai Movie Worldwide Theatre Count

நேற்று பட ரிலீசை முன்னிட்டு 'யானை' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

Arun Vijay Hari Yaanai Movie Worldwide Theatre Count

யானை படம் சென்சார் போர்டால் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. யானை படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவது 1500+ திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாக உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Hari Yaanai Movie Worldwide Theatre Count

People looking for online information on Arun Vijay, Hari, Priya Bhavani Shankar, Yaanai will find this news story useful.