அட்லி - ஷாருக்கான் இணையும் படத்தில் தளபதி விஜய் Cameo ரோல் பண்ணுவாரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 18, 2019 03:21 PM
இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து, பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குநர் அட்லி இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்.25ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அட்லி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஹிந்தி படம் இயக்கவிருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிக்க சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அட்லி மற்றும் விஜய் இடையே இருக்கும் புரிதல், சமீபத்தில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் டிரைலரை ஷாருக்கான் பாராட்டியது, மேலும், ஏற்கனவே இயக்குநர் பிரபுதேவாவிற்காக அவரது இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான அக்ஷய்குமாரின் ‘ரவுடி ராத்தோர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது உள்ளிட்டவற்றால், அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தில் விஜய் கேமியோ ரோல் நடிக்கலாம் என்ற கணிப்பு நிலவுகிறது.
எனினும், அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே, அதில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிப்பாரா என்பன குறித்து தெரியவரும்.