பிகில் Fever ஆரம்பம்..!: தளபதி போல் டிக் டாக் செய்து அசத்தும் பாட்டி- வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் சிங்கப்பெண்களுடன் விஜய் இருக்கும் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

60 year old grandma's Thalapathy Vijay's Bigil tik tok video

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழவை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரைலர் யூடியூபில் 2 மில்லியன் லைக்ஸ்களை பெற்றது. முதன்முதலாக ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்.25ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பிகில் டிரைலரின் காட்சிகள், வசனங்களை டிக் டாக் செய்து புல்லிங்கோக்கள் அனைவரும் வெறித்தனமான பிகில் ஃபீவரில் உள்ளனர். தளபதி விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தற்போது, 6 வயது குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை தளபதி விஜய்யின் பிகில் தாக்கம் பரவியிருக்கிறது. 60 வயது பாட்டி ஒருவர் பிகில் டிரைலரில் விஜய் பேசும் அழுத்தமான வசனங்களை அசால்ட்டாக டிக் டாக் செய்து அசத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிகில் FEVER ஆரம்பம்..!: தளபதி போல் டிக் டாக் செய்து அசத்தும் பாட்டி- வீடியோ வீடியோ