www.garudabazaar.com

2 பேருமே 90S கிட்ஸ் ஃபேவ்ரைட்.. ஆனா முதல் முறை தமிழில் இணையும் மோகன் & குஷ்பு.. பின்னணி என்ன? Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 14 பிப்ரவரி 2022: தாதா 87, பவுடர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.

mohan khushbu pair up first time tamil மோகன் குஷ்பு இணையும் படம்

இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில்தான் பிரபல 80ஸ், 90ஸ் கிட்ஸ் ஃபேவ்ரைட் நடிகர் மைக் மோகன் மற்றும் நடிகை குஷ்பு இணையவுள்ள புதிய தகவல் தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் வெளியாகியவுடனேயே ரசிகர்களுக்கு எழுந்த ஆர்வம் சொல்லி மாளாது.

மோகன் குஷ்பு இணையும் படம்

mohan khushbu pair up first time tamil மோகன் குஷ்பு இணையும் படம்

ஆம், இதற்கு முன்பாக நடிகர் மோகனும், குஷ்புவும் இணைந்து படம் நடித்திருக்கிறார்களா? என்பது தான் ரசிகர்களிடையே எழுந்த அந்த மில்லியன் டாலர் கேள்வி. அதன்படி, மோகனும் குஷ்புவும் 80களின் இறுதியில் தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்திருந்தாலும், இவர்கள் இருவரும் இணைந்து நடித்து உருவாகவிருக்கும் முதல் தமிழ்ப் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. 

இளம் வயது கதை..

இந்நிலையில் இதுகுறித்து நம்மிடையே பிரத்தியேகமாக பகிர்ந்துகொண்ட இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ, “இதுவரை இவர்கள் இருவரும் தமிழில் இணைந்து நடிக்கவில்லை. கோவை, ஊட்டி பின்னணியில் இவர்கள் இருவருக்கும் இடையிலான இளம் வயது கதையும் இப்படத்தில் சொல்லப்படவிருக்கிறது. இப்படம் ஒரு 80ஸ், 90ஸ் நாஸ்டால்ஜியாவையும் தொட்டுச் செல்லும். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

mohan khushbu pair up first time tamil மோகன் குஷ்பு இணையும் படம்

ஆக்‌ஷன் நாயகனாக..

மேலும் பேசியவர்,  “இப்படத்தின் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்படவிருக்கிறது. குஷ்பு மேடம் முன்பை விட தற்போது இன்னும் இளைத்து, இளமையாக காட்சியளிப்பது இப்படத்துக்கு கூடுதல் பலமாக இருக்கும். பலரும் மோகன் சாரை மெலோடி நாயகனாக பார்த்திருக்கிறாகள். இந்த படத்தில் வேற ஒரு ஆக்‌ஷன் நாயகனாக பார்ப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ஹன்சிகா நடிக்கும் புதிய படம்.. கிளாப் போர்டு அடிச்ச விஜய் சேதுபதி.. பரவும் ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

mohan khushbu pair up first time tamil மோகன் குஷ்பு இணையும் படம்

People looking for online information on Hushbu and mohan pair up, Khusbhu, Khushbu and mohan pair up first time, Mohan, Mohan and khushbu pair up, Mohan and khushbu pair up first time, Mohan khushbu pair up first time will find this news story useful.