பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை தழுவி பிஎம் நரேந்திர மோடி என்ற படம் உருவாகி உள்ளது.

இதில் மோடியாக ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்திருக்கிறார். ஓமங் குமார் இயக்கி இருக்கிறார். மோடியின் இளமைகாலம் முதல் தற்போது பிரதமராக உள்ளது வரை அவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை இப்படம் பிரதிபலிக்கிறது.
இப்படம், கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருவதால் இப்படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இப்படத்திற்கு தேர்தல் ஆணையமும் தடை விதித்து இருந்தது. இதை எதிர்த்து படக்குழு உச்ச நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கே விட்டு விட்ட கோர்ட், வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி வெளியாகிறது. அதற்கு மறுநாள் மே 24ம் தேதி, மோடி படத்தை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.