www.garudabazaar.com

Confirmed: 'தளபதி 65' படத்திலிருந்து 'விலகிய' ஏ.ஆர்.முருகதாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. எனினும் படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

Director AR Murugadoss Quit Vijay's Thalapathy 65?

இதற்கிடையில் துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து தளபதி விஜயுடன் மூன்று படங்களில் இணைந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 'தளபதி 65' படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணையப்போவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகி இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் 'தளபதி 65' படத்தின் இயக்குனர் யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Director AR Murugadoss Quit Vijay's Thalapathy 65?

People looking for online information on AR Murugadoss will find this news story useful.