"இதெல்லாம் அநியாயம் இதைக் கேட்க யாருமே இல்லையா..." -பாடலாசிரியர் விவேக் ட்விட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 15, 2019 12:21 PM
தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் பேராதரவை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் அட்லீ ட்விட்டரில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுளளார். அதில் விஜய் அணிந்த 5 நம்பர் ஜெர்சி போலவே அட்லீயும் 5 எண் கொண்ட ஜெர்சியை அணிந்துகொண்டிருக்கிறார். இந்த பதிவை பார்த்த பாடலாசிரியர் விவேக் "இதெல்லாம் அநியாயம்.. இதை கேட்க யாருமே இல்லையா எனக்கும் பிள்ளைகளுக்கும் டீ-சர்ட் பார்சல் ப்ரோ.. என்று பதிவிட்டுள்ளார்.
Idhellam aniyayam. Idha keka yaarume illaya😏. Enakkum Pullingalukkum Tee Shirt Parcel bro 🏃🏻♂️
No 5 ⚽️ https://t.co/qDp6xHC2sy
— Vivek Lyricist (@Lyricist_Vivek) November 14, 2019