பஸ் டே நிகழ்வு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்கள் பரவி வரும் நிலையில் இது குறித்து விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்து கலாய்த்துள்ளார்

நகைச்சுவையில் தனக்கென தனி வழி வகுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விவேக். ரசிகர்களால் சின்னக்கலைவாணர் என்றழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து நகைச்சுவையில் அசத்தியுள்ளார்.
சமீபத்தில் விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்த விவேக், தற்போது விஜய்யின் தளபதி 63 படத்திலும் இடம்பெற்றுள்ளார். குருவி படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இந்தப் படத்தில் விவேக் இணைந்து நடிக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டத்தின் போது மாணவர்கள் பஸ்சின் கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனர் பஸ்சின் ப்ரேக்கை பிடிக்க, கூரை மீது இருந்த மாணவர்கள் அனைவரும் கீழே விழுந்தனர்
இந்த நிகழ்வு குறித்து சமூகவலைதளங்களில் பல்வேறு மீம்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்
அதில், படிக்காதவன் படத்தில் விவேக் வில்லனிடம் அடிவாங்கிவிட்டு வெளியே வரும் போட்டோவை போட்டு என்ன பஸ் டே கொண்டாடிட்டீங்களா என்று கிண்டலாக அந்த மீமில் போடப்பட்டுள்ளது. அதனை கனத்த இதயத்தோடு சிரித்துவிட்டு, இதனை யோசித்துப் பார்க்கலாம் என்றும் விவேக் தெரிவித்துள்ளார்
U can laugh with a heavy heart n think! Some one forwarded this to me ! pic.twitter.com/PYy9nSVecG
— Vivekh actor (@Actor_Vivek) June 19, 2019