"ரஜினிசாரின் எளிமையும் அன்பும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது"- சந்தோஷ் சிவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினியின் எளிமை தன்னை வியக்க வைத்ததாக ‘தர்பார்’ படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Santhosh Sivan Tweet About Super star Rajinikanth Darbar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. மும்பையில் பலத்த மழை பெய்ததால், படப்பிடிப்பை ஜெய்ப்பூருக்கு மாற்றியது படக்குழு. ரஜினி நடித்த ‘தளபதி’ படத்துக்குப் பிறகு, இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன்.

‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினியுடன் பணியாற்றியது குறித்து சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் ஆச்சரியகரமான அன்பும் பிரகாசமும் ரஜினி சாரிடம் உள்ளது. அனைவரையும் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அவர் சரிசமமாக நடத்துவது உண்மையில் பிரமிக்க வைக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது.