விஷ்ணு விஷால் நடிக்கும் 'எஃப்ஐஆர்' படத்தில் இருந்து முக்கிய அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 25, 2019 12:21 PM
விஷ்ணு விஷால் நடிக்கவிருக்கும் 'எஃப்ஐஆர்' படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்தின் பூஜை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் (நவம்பர் 25) தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் அடுத்த வருடம் சம்மரில் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை மஞ்சிமா மோகன், பிக்பாஸ் பிரபம் ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றர். இந்த படத்துக்கு அஸ்வத் இசையமைக்கிறார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை சுஜாதா எண்டர்டெயின்மென்ட் சார்பாக ஆனந்த் ஜாய் தயாரிக்க, மனு ஆனந்த் இந்த படத்தை இயக்குகிறார்.
Tags : FIR, Vishnu Vishal, Manjima Mohan, Raiza