தனது 'அயோக்யா' படம் குறித்து தல அஜித் ஸ்டைலில் விஷால் பஞ்ச்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அயோக்யா'. சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

Vishal Tweets about his Ayogya movie release

இந்த படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று வெளியாகவிருந்த இந்த படம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து நடிகர் விஷால், 'அயோக்யோ ரிலீஸுக்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன் ஆனால் முடியவில்லை' என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் எழுதியுள்ளார். அதில், 'விவேகம்' படத்தில் தல அஜித் கூறியது போல், ஐ வில் நெவர் கிவ் அப் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 'அயோக்யா எனக்கு முக்கியமான படம்.

இந்த படம் சமூகப் பிரச்சனைகளை பேசியிருப்பது தான் அதற்கு காரணம். பாலியல் குற்றங்கள் குறித்து திரையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் வெளியாகும் . இந்த படத்தினால் நான் பெருமையாக உணர்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.