OFFICIAL: தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையுடன் மோதும் மற்றொரு படம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 19, 2019 07:15 PM
ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகியுள்ள ‘பக்ரீத்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Vikranth's Bakrid is all set to hit on August 9 after Ajith's Nerkonda Paarvai release Vikranth's Bakrid is all set to hit on August 9 after Ajith's Nerkonda Paarvai release](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vikranths-bakrid-is-all-set-to-hit-on-august-9-after-ajiths-nerkonda-paarvai-release-news-1.jpg)
எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் முதல் படமான ‘பக்ரீத்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.9ம் தேதி ரிலீசாகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.8ம் தேதி ரிலீசாகவுள்ளது. வரும் ஆகஸ்ட்.12ம் தேதி இஸ்லாமியர்களின் பண்டியகையான ‘பக்ரீத்’ பண்டிகை வருவதையொட்டி, ‘பக்ரீத்’ திரைப்படம் ரிலீசாகவுள்ளது.
Tags : Vikranth, Ajith Kumar, H Vinoth, Nerkonda Paarvai, Bakrid