''Bigg Boss அபிராமிக்கு கிடைத்த பெயரை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மாற்றும்''
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 19, 2019 12:36 PM
தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் திர்ஷா இல்லனா நயன்தாரா படங்களின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அஷ்வின் ராவ் உள்ளிட்ட நடிகர்கள் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தனர்.
அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிராமி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்கள் அபிராமிக்காக பார்க்கிறோம். இந்த படம் அபிராமியின் பெயரை மாற்றும். அவர் சிறந்த நடிகர். பிக்பாஸை வைத்து யாரையும் எடை போடக்கூடாது. என்றனர்.
''BIGG BOSS அபிராமிக்கு கிடைத்த பெயரை அஜித்தின் நேர்கொண்ட பார்வை மாற்றும்'' வீடியோ