Breaking: ‘பேட்ட’ ஸ்டாரின் அடுத்தப்பட ரிலீஸ் தேதி இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 19, 2019 06:37 PM
‘பேட்ட’ திரைப்படத்தை தொடர்ந்து சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரித்துள்ள ‘கென்னடி கிளப்’ படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
நிஜ கபடி வீராங்கனைகளும் நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட்.15ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags : M Sasikumar, Bharathiraja, Kennedy Club, Suseenthiran