'கடாரம் கொண்டான்' படத்துக்கு பிறகு விக்ரம், மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'இமைக்கா நொடிகள்' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் 'கோப்ரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் கோப்ரா படத்தை 7 ஸ்கீரின் ஸ்டுடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக KGF பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். சிவகுமார் விஜயன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நாளையுடன் (25.01.2020) முடிவடைகிறதாம். இந்த படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்துடன் முடிப்பதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறதாம். இதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் கலந்துகொள்ளவிருக்கிறாராம்.