நடிகர் விக்ரம் தற்போது 'இமைக்கா நொடிகள்' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 58வது படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

7 ஸ்கீரின் ஸ்டுடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக KGF பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். சிவகுமார் விஜயன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மிருனாளினி ரவி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு விக்ரம் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவை குறிப்பிட்டு, ''கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸாக இருக்கணும்'' என்றார். அதற்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து பிகில் படத்தில் ராயப்பன் ஃபோட்டோவை பகிர்ந்தார்.
👍🏻👍🏻😊 https://t.co/IUZTjii2bJ pic.twitter.com/FDnRabtvjj
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) January 25, 2020