www.garudabazaar.com

"கனத்த மனசோட தான் அதை செஞ்சேன்".. உருக்கமாக பேசிய விக்ரமன்.. நெகிழ்ந்த போட்டியாளர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Last Nomination was very hard says vikraman in BB6

Also Read | ADK-வுக்கு வந்த உடல் சிக்கல்.. அமுது கொடுத்த அட்வைஸை கேட்டு மிரண்டு போன விக்ரமன்..!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Nomination was very hard says vikraman in BB6

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Last Nomination was very hard says vikraman in BB6

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது.

இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் விஜே பார்வதி மற்றும் Behindwoods-ன் விஜே ஷோபனா ஆகியோர் வந்திருக்கின்றனர். போட்டியாளர்களுடன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், நாமினேஷன் பற்றியும் வீட்டில் இருந்து வெளியேறுவது பற்றியும் ஷோபனா பேசுகிறார்.

Last Nomination was very hard says vikraman in BB6

அப்போது பேசும் விக்ரமன்,"நேற்று ஒரு நாமினேஷன் பண்ணோம். உண்மையிலேயே அது ரொம்பவே கனமா இருந்தது. கடைசி நாமினேஷன் அது. அப்பவும் ஒருத்தரை விமர்சனம் செஞ்சு வெளியில அனுப்பனும் அப்டிங்குறது எனக்கு ரொம்பவே கனமா இருந்துச்சு. கனத்த இதயத்தோட தான் இத பண்றேன்னு சொல்லிட்டு தான் செஞ்சேன். இதுவரைக்கும் செஞ்ச நாமினேஷன்லேயே நேற்று பண்ணது ரொம்ப ஹெவியா இருந்துச்சு" என்கிறார்.

Also Read | "சினிமாவின் எவெரெஸ்ட்".. உலகநாயகனை சந்தித்த 'பிரேமம்' இயக்குனர் .. நெகிழ்ச்சி பதிவு..!

தொடர்புடைய இணைப்புகள்

Last Nomination was very hard says vikraman in BB6

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.