www.garudabazaar.com
iTechUS

"DD முன்னாடி நிக்குறவங்க".. ராமாயணத்தை வெச்சு விக்ரமன் சொன்ன உதாரணம்.. Bigg Boss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Vikraman about DD in bigg boss housemates reacts

Also Read | Nepal Plane Crash : விமான விபத்தில் 72 பேர் பலி.. பயணி எடுத்த லைவ் வீடியோவில் பதிவான திக் திக் நிமிடங்கள்!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம் தற்போது ஏழு போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

Vikraman about DD in bigg boss housemates reacts

இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்று டாஸ்காக கொடுக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக லுங்கி மற்றும் பனியன் தான் அசிம் அணிந்து வலம் வந்திருந்தார். அவரைப் போல அமுதவாணனும் பிரவுன் நிற தலைமுடியுடன் இருக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து முந்தைய போட்டடியாளர்கள் அனைவரும் மீண்டும் வந்த பின் Sacrifice டாஸ்க் 2.0 என்ற பெயரில் மீண்டும் சில டாஸ்க்குளும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட அதன் காரணமாக சில பிரச்சனைகளும் நடைபெற்றது.

Vikraman about DD in bigg boss housemates reacts

இப்படியாக இந்த வாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கமல்ஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றி இருந்தார். அப்போது போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விஷயங்களையும் கமல்ஹாசன் உரையாடி இருந்தார். போட்டியாளர்களிடையே நிறைய கேள்விகளை எழுப்பி, அதற்கான அசத்தல் பதில்களையும் பெற்றிருந்தார் கமல்ஹாசன். இதற்கடுத்து ADK வும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதனிடையே தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளர் DD பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவருக்கு போட்டியாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொங்கல் பண்டிகைக்கு நடுவே அனைத்து போட்டியாளர்களுடனும் கலகலப்பாக உரையாடி இருந்த DD, பல சுவாரஸ்ய விஷயங்களையும் போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

Vikraman about DD in bigg boss housemates reacts

DD பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்த தருணம் பெரிய அளவில் பாசிட்டிவ்வாகவும் அமைந்திருந்தது. இந்த நிலையில், DD-ஐ பார்த்து விக்ரமன் ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்.

DD-யிடம் பேசும் விக்ரமன், "ராமாயணத்துல சொல்லுவாங்க வாலிக்கு முன்னாடி நிக்குறவங்க தன்னோட பலத்தை இழந்துருவாங்க அப்படின்னு. ஆனா, DD -க்கு முன்னாடி நிக்குறவங்க அவங்க பலத்தையும் சேர்த்து பெறுறாங்க. DD ரொம்ப நன்றி" என கூறியதும் நெகிழ்ந்து போகிறார் DD. விக்ரமன் சொன்ன உதாரணத்தை கேட்டு சக ஹவுஸ்மேட்ஸ்களும் கூட தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.

இறுதியில், "Fire-ஆ இருக்கணும் ஓகே. எல்லாரும் சிரிச்சுகிட்டே இருக்கணும்" என அனைத்து போட்டியாளர்களிடமும் DD அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இன்னைக்கு என்னோட விக்கெட்டை நீ எடுத்திருக்கலாம்".. சச்சினின் சவால்.. சீக்ரட்டை உடைத்த முன்னாள் வீரர்.. God of cricket-னா சும்மாவா..?

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman about DD in bigg boss housemates reacts

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, DD, Dhivya Dharshini, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.