''என் ஹஸ்பண்ட்க்கு தெரிஞ்சிடுமோனு பயமா இருக்கு'' - ரசிகையின் கமெண்ட்க்கு மாதவனின் ரியாக்ஷன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இஸ்ரோ விஞ்ஞானியான நமபி நாராயணன் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு  'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை மாதவன் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

Madhavan Discussed with fans about Rocketry the Nambi Effect

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மாதவனின் மனைவியாக சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தமிழ் வெர்ஷனில் சூர்யாவும், ஹிந்தி வெர்ஷனில் ஷாரூக் கானும் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவிருக்கின்றனராம்.

இந்நிலையில் இந்த படம் குறித்து மாதவன் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகையின் கமெண்ட்டை ஸ்கீரன் ஷாட்டாக எடுத்து போஸ்ட் செய்து சிரிக்கும் ஸ்மைலியை இட்டார்.

பின்னர் அதனை சில தமிழ் தெரியாத ரசிகர்கள் அது என்னவென்று குழம்பினர். சில தமிழ் ரசிகர்கள் அதனை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து விளக்கினர்.  அதற்கு மாதவன் நன்றி தெரிவித்தார்.