www.garudabazaar.com

அனிருத் வெளியிட்ட 'விக்ரம்' படத்தின் OST.. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிரட்டலான பின்னணி இசை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தில் இருந்து ஒரிஜினல் சவுண்ட் டிராக்

Vikram Movie Original Sound Track BGM Released by Anirudh

OST எனும் பின்னணி இசைக்கோர்வைகள் வெளியாகி உள்ளன.

Also Read | ஒளிப்பதிவாளராக மாறிய மாளவிகா மோகனன்.. விளையாட்டு சாமானாக மாறிய கேமரா !

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Vikram Movie Original Sound Track BGM Released by Anirudh

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது.

கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. 30வது நாளைக் கடந்தும்  படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுகிறது.

Vikram Movie Original Sound Track BGM Released by Anirudh

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

Vikram Movie Original Sound Track BGM Released by Anirudh

இந்நிலையில், விக்ரம் படத்தின் பின்னணி இசைக் கோர்வைகளை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். விக்ரம் படத்தின் வெற்றிக்கு அனிருத் ரவிச்சந்திரனின் இசை பிரதான பங்கு வகித்தது என்பதுடன் ரசிகர்கள் மத்தியில் இந்த இசைக்கோர்வைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

Also Read | டாப்ஸி நடிக்கும் மிதாலி ராஜின் BIO-PIC.. அடுத்தடுத்து போட்டோ ஷூட்டால் ட்ரெண்டாகும் செம போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Movie Original Sound Track BGM Released by Anirudh

People looking for online information on Anirudh, Kamal Haasan, Vikram Movie, Vikram Movie Original Sound Track Release updates will find this news story useful.