www.garudabazaar.com

வாரிசு படத்தின் அம்மா பாடல்.. ரிலீஸ் எப்போ? புதிய போஸ்டருடன் வெளியான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Soul of Varisu 3rd Single Amma Song Release Update

Also Read | FIFA World Cup மேட்சில் யுவன்.. துணிவு T-சர்ட் அணிந்து பிரபல வினியோகஸ்தர்.. வைரல் வீடியோ!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Soul of Varisu 3rd Single Amma Song Release Update

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பாடல்களை தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Soul of Varisu 3rd Single Amma Song Release Update

நாளை மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் ஆன்மா என்ற வாசகத்துடன் அம்மா பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தளபதி விஜய்யின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Also Read | "நிஜமான காடு இது".. சூரி வெளியிட்ட மிரட்டலான விடுதலை பட ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Soul of Varisu 3rd Single Amma Song Release Update

People looking for online information on Varisu, Varisu 3rd Single Amma Song, Varisu 3rd Single song, Vijay will find this news story useful.