"அசீம் குழந்தை மாதிரி".. பிக் பாஸ் வீட்டுக்குள் விக்ரமன் இப்டி தான்.. ராம் Exclusive!!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், தற்போது மிக முக்கியமான ஒரு கட்டத்தையும் இந்த நிகழ்ச்சி எட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
Also Read | இந்தியன் 2 படப்பிடிப்பில் கருணாநிதியை நினைவுகூர்ந்து ட்வீட் செய்த கமல்.. வைரல் ஃபோட்டோ!
சுமார் 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இனி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடி நிறைந்ததாக தான் இருக்கும். அடுத்தடுத்து டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலும் உள்ளது.
மேலும், பிக்பாஸ் பார்வையாளர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு ஆதரவினை அளித்து வருவதுடன் அவர்கள் பற்றிய கருத்தையும் தெரிவித்து வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த விஷயம், தினந்தோறும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அதே போல, ஒவ்வொரு வாரமும் நடைபெறும் டாஸ்க் காரணமாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் கூட போட்டியாளர்கள் இடையே நடைபெற்று வருவதும் பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெறும். இப்படி ஏகப்பட்ட பரபரப்பான சம்பவங்கள் நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதால், விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
முன்னதாக, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறி இருந்தார். இதற்கடுத்து மற்ற போட்டியாளர்கள் புதிய டாஸ்க்கில் தங்களின் திறனை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியான ராம், Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்ய கருத்துக்களை ராம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது அசீம் மற்றும் விக்ரமன் குறித்து பேசிய ராம், "அசீம்க்கும், எனக்கும் பர்சனலா எந்த ஒரு Clash-ம் இருந்தததில்லை. நாங்க ரொம்ப நல்ல பிரண்ட் ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தோம். நான் சித்தப்பானு கூப்பிடுவேன், அவரு என்னை தம்பின்னு கூப்பிடுவாரு. அந்த வீட்டிலேயே என்கிட்டயும், ADK கிட்டயும் அசீம்க்கு ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் இருந்தது. ADK கூட நடுவுல சண்டை வந்துச்சு. ஆனா என் கூட சண்டையே வரல. சில விஷயங்கள் அவர் பண்ணும்போது ஏன் இப்படி பண்றாருன்னு யோசிப்பேன்.
எவ்வளவுக்கு எவ்வளவு அசீம் கோவப்படுறாரோ, அதே அளவுக்கு எமோஷனல் சைடும் அவருக்கு இருக்கு. அவர் ஒரு குழந்தை மாதிரி. அவர் பண்றத பாத்து நானே அவர் ஏன் இப்படி எல்லாம் பண்றாருன்னு பேசி இருக்கேன். எனக்கு அசீம வெளியே தெரியாது, உள்ள தான் தெரியும். ஒருவேளை அசீம வெளியே வந்து பார்த்தா, எனக்கு ஒரு புரிதல் கிடைக்கும், அதுனால தான் அப்படி இருக்காருன்னு.
விக்ரமன் ரொம்ப நேர்மையான ஆளு. இப்ப நானும் விக்ரமனும் பேசிட்டு இருந்தா ஒரு விஷயம் பிடிக்கலைன்னா நேரடியா புடிக்கலைன்னு சொல்லிடுவாரு. அந்த மாதிரி ஆட்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால எனக்கும் அவருக்கும் ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் இருந்தது. நான், ADK, விக்ரமன் சேர்ந்து உட்கார்ந்து நிறைய கதை பேசுவோம். ஜாலியா பேசிட்டு இருப்போம்" என ராம் தெரிவித்துள்ளார்.
Also Read | வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ? செம்ம அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!
"அசீம் குழந்தை மாதிரி".. பிக் பாஸ் வீட்டுக்குள் விக்ரமன் இப்டி தான்.. ராம் EXCLUSIVE!! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ganesh Venkatraman About Varisu Movie Sj Suryah Role
- Vijay Varisu Movie Audio Launch Date Ganesh Venkatraman Exclusive
- Vijay TV Serial Director Thai Selvam Passed Away
- Ayesha Guessing About Title Winner Bigg Boss 6 Tamil Exclusive
- Vijay TV Bharathi Kannamma Today Episode Promo Video
- Actress VJ Archana Met Vairamuthu Pics Viral On Social Media
- Azeem Speak About Bigg Boss Old Contestants To Housemates
- Bigg Boss Ayesha Opens Up Clash With Azeem Breaking Interview
- Vikraman Shivin Arguement Bigg Boss 6 Tamil பிக்பாஸ்
- ADK Thuglife Comment On Kitchen Clash Bigg Boss 6 Tamil
- Sharukh Khan Deepika Padukone Besharam Rang Song Video
- Producer Ravindar Instagram Post About His Wife Mahalakshmi
தொடர்புடைய இணைப்புகள்
- மனமுடைந்து போன MIRCHI SENTHIL | R.I.P THAI SELVAM
- 🔴 THAI SELVAM மறைவிற்கு மனவேதனையில் வந்த REKHA NAIR | RIP
- 🔴 Eeramana Rojave 2 Serial Director Thai Selvam மறைவு | R.I.P | Vijay Tv
- 🔴LIVE: "சனியனே சொல்லுவியா! 😡 MYNA Vs AMUDHU 🔥 கிளம்பு, காத்து வரட்டும்!" தோலுரிக்கும் Fatman Review
- ஆழ்வார்பேட்டை ஆண்டவா🤩 Kamal Haasan Vikram 100 Day Celebration💥 #shorts #kamalhaasan #behindwoods
- Agent Uppiliappan Meets Agent Vikram💥 Kamal Haasan Vikram 100 Day Celebration💥 #shorts #kamalhaasan
- நாயகன் மீண்டும் வர...🔥 Kamal Haasan Vikram 100 Day Celebration💥 #shorts #kamalhaasan #behindwoods
- "Azeem, Vikraman பத்தி பேச முடியாது 😡 மூஞ்சி காட்டி, முறைச்சு, Vengeance வெச்சு" 🔥Ayesha Interview
- 🔴LIVE: "VIKRAMAN ரொம்ப Decent 🙏AZEEM மாத்தி மாத்தி பேசி 😡Leave Me Alone " தோலுரிக்கும் Fatman Review
- Wife கூட சண்டையா??😅 Tips கொடுத்த TSK🤣 "பொண்டாட்டி தொல்லை இனி இல்ல"
- "அது செம்ம போதை!... நான் Addict ஆகிட்டேன்" - VJ Priyanka Shocks Fans 😱
- 🔴LIVE: ADK: "AZEEM-கிட்ட அப்படி என்ன பாத்தாங்க... சுத்தமா புடிக்கல" 😡 தோலுரிக்கும் Fatman Review