777 Charlie Trailer

“அழகான ஜோடிக்கு அற்புதமான வாழ்க்கை…” பிரபலங்களின் வாழ்த்துகள்.. ட்ரண்ட் ஆன Nayan wedding pics

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதிதாக திருமணம் செய்துகொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு பிரபலங்கள், தங்கள்  வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

Celebrities wishes Nayanthara vignesh shivan couple

நட்சத்திர ஜோடிகள்

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக கடந்த சில ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வலம் வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

Celebrities wishes Nayanthara vignesh shivan couple

திருமணம்

இந்நிலையில் நேற்று (ஜூன் 9) விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற நட்சத்திர ஓட்டல் இன்று ஜூன் 9 ஆம் தேதி நடந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து பல திரையுலகப் பிரபலங்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

Celebrities wishes Nayanthara vignesh shivan couple

திரைபிரபலங்கள் வாழ்த்து…

திருமணம் முடிந்துள்ள நிலையில் மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தரப்பினர் வெளியிட்டனர். மணக்கோலத்தில் மகிழ்ச்சியோடு இருக்கும் தம்பதிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்றன. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆரி, பிரியா அட்லி உள்ளிட்ட போன்ற திரைபிரபலங்களும் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். இதனால் சமூகவலைதளங்கள் நேற்று நயன்தாரா விக்னேஷ் திருமணப் புகைப்படங்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.

“அழகான ஜோடிக்கு அற்புதமான வாழ்க்கை…” பிரபலங்களின் வாழ்த்துகள்.. ட்ரண்ட் ஆன NAYAN WEDDING PICS வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Celebrities wishes Nayanthara vignesh shivan couple

People looking for online information on Marriage, Nayanthara, Vignesh shivan will find this news story useful.