777 Charlie Trailer

BGM 8 MOMENTS: “அஜித்துக்கு on screen-ல சரியான ஜோடினா…” டக்குன்னு விக்னேஷ் சிவன் சொன்ன பெயர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் நடந்த Behindwoods Gold medal நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்துகொண்டார்.

Vignesh shivan talked about ajith on screen best pair

Behindwoods Gold Medals

ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

Vignesh shivan talked about ajith on screen best pair

இயக்குனர் விக்னேஷ் சிவன்

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவரிடம் அவர் எழுதிய டிப்பம் டப்பம் பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடியது குறித்து தெரிவித்த போது “அந்த பாடலை எழுதியன் பயனை அடைந்துவிட்டதாக நினைக்கிறேன். அவரை ரொம்ப பிடிக்கும். அவரின் சமீபத்தைய படங்களை பார்த்துள்ளேன். முதல்நாளே வந்திருந்தால் அவரை பார்த்திருப்பேன்” என பதிலளித்தார்.

Vignesh shivan talked about ajith on screen best pair

Onscreen-ல் அஜித், நயன்தாரா

பின்னர் அடுத்து அவர் இயக்க உள்ள அஜித் 62 படத்தைப் பற்றி கேட்டபோது “இன்னும் அந்த படத்துக்கான வேலைக்குள் செல்லவே இல்லை” எனக் கூறினார். மேலும் “அஜித்துக்கு திரையில் சிறந்த ஜோடி என்று ரசிகராக நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்” என்று கேட்டபோது யோசிக்காமல் “நயன்தாராதான். இருவரும் இணைந்து நடித்த படங்களில் விஸ்வாசம் உள்ளிட்ட அனைத்துப் படங்களும் எனக்குப் பிடிக்கும்” என பதிலளித்தார்.

Vignesh shivan talked about ajith on screen best pair

BGM 8 MOMENTS: “அஜித்துக்கு ON SCREEN-ல சரியான ஜோடினா…” டக்குன்னு விக்னேஷ் சிவன் சொன்ன பெயர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan talked about ajith on screen best pair

People looking for online information on Ajith, Ajith 62, Vignesh shivan will find this news story useful.