இதே மத்த அப்பானா... துருவ் விக்ரம் குறித்து அவரது அப்பா விக்ரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள 'ஆதித்யா வர்மா' படத்தை E4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

Vikram and Dhruv Vikram Speech at Adithya Varma Audio Launch

இந்த படத்தை கிரீசயா இயக்க, ரதன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பனிட்டா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா செய்தியாளர் சந்திப்பு இன்று நடந்தது. சத்யம் சினிமாஸில் நடந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன

பள்ளி கல்லூரி மாணவிகள் மத்தியில் த்ருவ்தான் தற்போது ட்ரெண்ட். ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இதைத்தான் உற்சாகமாக கூறியுள்ளார் விக்ரம்.

விக்ரமும் அவரது மகன் த்ருவும் இணைந்து மேடையில் ஒரு பாடலை பாடினார்கள்.. மேடையில் பேசிய விக்ரம், ஓர் தந்தை தன் மகனுக்காக வீடு, பணம், சொத்து இவற்றை சம்பாதித்து வைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் நான் என் மகனுக்கு கொடுக்க நினைப்பது இந்த ஆரவாரம் செய்து கொண்டாடும் ரசிகர்களைத் தான். எனக்கு அடுத்து என் மகனிற்கு கைதட்டி, விசிலடிக்கும் இத்தனை அன்பான ரசிகர்கள் அவனுக்கு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றார். ஒவ்வொருவர் குறித்தும் தனித்தனியே பேசி நன்றி தெரிவித்த விக்ரம், தொடர்ந்து படம் உருவாக உதவி புரிந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து, நான் ஒரு ஃபோன்தான் பண்ணேன். சிவா... எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் சிவா இந்தப் படத்துக்கு ஒரு சாங் எழுதணும்'னு கேட்டேன். அவர் உடனே எழுதித்தந்தார். மற்ற எல்லா பாடல்களிலும் ஓரிரு வரிகளை நாங்க மாற்றினோம். ஆனால், சிவா எழுதிய பாட்டுல மட்டும் எதுவுமே மாற்றல. அந்த அளவுக்கு அருமையாக எழுதித்தந்தார். தேங்க்ஸ் சிவா என்று கூறினார்.

இதே மத்த அப்பானா... துருவ் விக்ரம் குறித்து அவரது அப்பா விக்ரம்! வீடியோ