6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள்..? - வெங்கட் பிரபு -சிம்பு தேவன் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி', 'அறை எண் 305ல் கடவுள்', 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்', 'ஒரு கன்னியும், மூன்று களவானியும்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்பு தேவன்.

Venkat Prabhu and Chimbu Deven's Film titled KasadaTabara

இவர் தளபதி விஜய்யை வைத்து 'புலி' படத்தை இயக்கியிருந்தார். இதனையடுத்து அவர் இயக்கும் படத்துக்கு புதிய 'கசட தபற' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தை வெங்கட் பிரபுவுடன் இணைந்து ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்திரன் தயாரிக்கிறார். 

இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 இசையமைப்பாளர்கள், 6 எடிட்டர்கள் பணிபுரியுள்ளனர். எனவே இது ஒரு ஆந்தாலஜி வகை திரைப்படம் என்கிற எண்ணம் தோன்றுகிறது. இதுகுறித்து முழுமையான விபரங்களை படக்குழு அறிவித்தால் இது குறித்து தெரியவரும்.