காக்கி சட்டையுடன் புலி வேட்டைக்கு புறப்பட்ட சிபிராஜ்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 31, 2019 03:55 PM
சிபி சத்தியராஜ் போலீஸ் வேட த்தில் நடித்துள்ள ‘வால்டர்’ பட த்தின் டீசர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அவர் ரேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முன்பு அவரைவைத்து ஜேக்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார். இதில் சிபிக்கு நாயகியாக ரம்யா நம்பிசன் நடிக்கிறார். ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அரோல் கரோலில் இசையமைக்கிறார்.
முன்னதாகவே ரேஞ்சர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது லேட்டஸ்டாக கிடைத்திருக்கும் தகவலின்படி ஆந்திராவில் உள்ள தலக்கோணம் பகுதியில் சிபிராஜ் ரேஞ்சர் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
Tags : Sibiraj