’தளபதி கூட நடிச்சிட்டேன்…’ Super உற்சாகத்தில் ’தளபதி 64’ நடிகர்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 30, 2019 06:27 PM
நடிகர் விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் குறித்த நடிகர், நடிகைகளின் சமூகவலைதள பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, விஜய் டிவி புகழ் தீனா, ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன், விஜே ரம்யா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (31.12.2017) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. உடன் மறுநாள் (01.01.2019) அதன் செக்கண்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் இன்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தளபதி 64ல் நடித்த ரமேஷ் திலக் தான் விஜய்யுடன் நடித்த உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். இந்த வருடம் சிறப்பாக முடிந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் அனைவருக்கும் அட்வான்ஸ் நியூ இயர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
2019 ends with a sooper positive note ❤️ So happy to be associated with the amazing #Thalapathy64 team❤️ Advance happy new year makkale 🙏🏽🙏🏽Yaaaa #Thalapathy kooda nadichiten😃❤️🔥@Dir_Lokesh @sathishoffl @iam_arjundas #Thalapathy64update #Thalapathy #ThalapathyFans #Verithanam pic.twitter.com/19dOBf485r
— Ramesh Thilak (@thilak_ramesh) December 30, 2019