இந்த போலீஸை கண்டால் அழுகைதான் வருகிறது - கலங்கும் மாஸ்டர் பிரபலம்.! நிஜ ஹீரோ இவங்கதான்.
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

மேயாதமான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இதையடுத்து இவர் அமலா பால் நடிப்பில் ஆடை படத்தை இயக்கினார். வித்தியாசமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. இவர் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் திரைக்கதையில் வேலை செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியின் காரணமாக ஒரு போலீஸ்காரர் தனியாக பெட்ரோல் பங்கில் அமர்ந்து சாப்பிடும் போட்டோ வெளியானது. இதையடுத்து பார்ப்பவர்களின் மனதை கலங்க வைத்த இந்த போட்டோவில், அவரது மகளும், மனைவியும் அருகில் இருந்து சாப்பாடு பறிமாறுவது போல டிசைன் செய்யப்பட்ட போட்டோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டோவை க்யோட் செய்து, ''கண்ணீர்தான் வருகிறது. இந்த கோடை காலத்திலும் 24 மணி நேரமும் நமக்காக உழைக்கும் இந்த போராளிகளின் மேல் பெரிய மரியாதை வருகிறது. கொரோனா வைரஸ் முடிவதற்குள் மனிதமும் மனிதாபிமானமும் வளரட்டும்'' என அவர் பதிவிட்டுள்ளார். ரத்னகுமாரின் இந்த பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tear jerking ❤️. Huge respect to each and every 24/7 comrades who work for us in this summer. Let the human and humanity evolve big time before the end of this Corona crisis. 🙏☺️ #CoronavirusOutbreakindia #lockdownindia https://t.co/RPyipxVEZM
— Rathna kumar (@MrRathna) April 2, 2020