பாரதியாருக்கும் கொரோனா வைரஸுக்கும் சம்பந்தம் உண்டு! அருண்ராஜா காமராஜின் குட்டி ஸ்டோரி இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் குறித்து இயக்குநரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து அருண்ராஜா காமராஜ் கருத்து | vijay's master lyricist arunraja kamaraj opens about corona virus and caste

கனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான இவர், டைரக்‌ஷன் மட்டுமின்றி பாடல் எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ரஜினியின் கபாலி படத்தில் இவர் எழுதிய நெருப்புடா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்மையில் மாஸ்டர் படத்தில் இவர் குட்டி ஸ்டோரி என்ற பாடலை எழுதினார்.

இந்நிலையில் அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கியமான பதிவை பதிவிட்டுள்ளார். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை பதிவிட்ட அவர், அத்துடன் ''சாதிகள் இல்லையடி பாப்பா'' என்று பதிவிட்டுள்ளார். மேலும் எல்லா சாதியையும் சமமாக பார்க்கும் மகாகவி கொரோனா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor