''கருத்து சொல்லுங்க.. ஆனா பொண்டாட்டி முன்னாடி..'' - மனைவியிடம் சிக்கிய மாஸ்டர் ஷாந்தனு.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மனைவியுடன் ஒரு க்யூட் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

மூத்த இயக்குநர் கே.பாக்யராஜின் மகன் ஷாந்தனு. சக்கரக்கட்டி, சித்து பிளஸ்-2 உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் பிரபலமானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மாஸ்டர் ஆடியோ லான்ச்சில், விஜய்யுடன் இவர் சூப்பர் குத்தாட்டம் போட்டார்.
இந்நிலையில் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கொரோனா வைரஸ் பாதுகாப்பாக, வீட்டில் இருங்க, உடலை ஃபிட்டாக வைத்து கொள்ளுங்க, உடற்பயிற்சி செய்யுங்கள் என சொல்லி கொண்டிருக்க, அவரின் மனைவி குறுக்கிட்டு, நேற்று வரைக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள், நன்றாக சாப்பிட்டு உறங்கி கொண்டு தானே இருந்தீர்கள் என சொல்கிறார். மனைவியிடம் மாட்டிக்கொண்ட ஷாந்தனு, 'கருத்து சொல்லுங்க, ஆனா பொண்டாட்டி முன்னாடி சொல்லாதீங்க'' என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
Warning : கருத்து சொல்லுங்க but not in front of your wife @KikiVijay 🤷🏻♂️🙄#StayHome #StayHealthy #lockdown #lockdownparidhabangal
But on a serious note , #staysafe 👍🏻 #CoronavirusPandemic pic.twitter.com/HWxOU6Mopd
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) March 23, 2020