என்னாது?? மாஸ்டர் குட்டி ஸ்டோரில 'கொரோனா'வா... இதை கவனிச்சீங்களா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் 'மாஸ்டர்'. இதில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்து முடிந்தது.

மாஸ்டர் குட்டி ஸ்டோரி பாடலில் கொரோனா பற்றி இருக்கா Is there is Corona Reference In Master Kutty Story Song

மாஸ்டர் படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்துள்ளன. சிங்கிளாக வெளிவந்த மூன்று பாடல்களுமே வேற லெவல் ஹிட் அடித்தது.  6 முதல் 60 வரை பலரும் மாஸ்டர் பாடல்களுக்கு ஸ்டெப் போட்டு வீடியோ பதிவிடுகின்றனர். அதிலும் விஜய் பாடிய 'குட்டி ஸ்டோரி' பாடல் பலருக்கும் எனர்ஜி டானிக்.

இந்நிலையில் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோவில் 'கொரோனா' என்ற வார்த்தை வருவதை சில ரசிகர்கள் கண்டுபிடித்து வைரல் ஆக்கி வருகின்றனர். ஆம் "டிசைன் டிசைனா ப்ராப்ளம்" என்ற வரியில்  கொரோனா என்ற சொல் வருகிறது. ஒரு மாதத்திற்கு பின் வர போகும் நோயை கூட கண்டுபிடித்து, அறிவுரை சொல்கிறார் தளபதி என்று ரசிகர்கள் குஷி ஆகி விட்டனர்.

Entertainment sub editor